மறு அறிவித்தல் வரை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் பூட்டு! மேலதிக வகுப்புகளுக்கும் தடை!

மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து பாடசாலைகள் மற்றுm பல்கலை கழகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு மேலதிக வகுப்புகள் நடாத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நோன்பு பெருநாள், வெசாக் பண்டிகை ஆகியவற்றை வீட்டிலேயே கொண்டாடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு சகலவிதமான கொண்டாட்டங்கள் நடாத்துவதற்கும் எதிர்வரும் 17ம்திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்தார்.

COVID தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.