இந்திய கொரோனா பிரான்சிலும் பரவியது!

இந்தியாவில் இனம் காணப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸானது பிரான்ஸ் நாட்டிலும் பரவி உள்ளதாக பிரான்ஸ் சுகாதார துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இரட்டைபிறழ்வு திரிபுவைரஸ் என கூறப்படும் ‘B.1.617’ உருமாறிய கொரோனா மராட்டியமாநிலத்தில் 50%இற்கும் அதிகமான மாதிரிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2ம் அலை மிக வேகமாக பரவுவதற்கு இந்த வைரஸ் காரணமாக இருக்கலாமென அஞ்சப்படுகிறது.

இந்த வைரஸின் பரவலானது 17 நாடுகளில் இணம்காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவருக்கு புதிய கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.