முதலாவது கர்ப்பிணி மம்மி கண்டுபிடிக்கப்பட்டது!

கருவுற்ற நிலையில் காணப்பட்ட உலகில் முதலாவது மம்மி ஒன்றினை  ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த மம்மி ஆனது  போலந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலாந்து நாட்டிற்கு 19ம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்ட மம்மியை  ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

மம்மியின் உடல்வாகுவை கொண்டு பாதிரியர் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட போது மம்மி ஒரு கர்ப்பிணிபெண் என்பது தெரியவந்தது.

அந்த மம்மிக்கு 20வயது இருக்கலாம் எனவும் அதன் வயிற்றில் 26 – 28 வாரத்திற்கு இடைப்பட்ட சிசு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் உலகில் கண்டறியப்பட்ட முதலாவது கர்ப்பிணி மம்மி இதுவென  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.