Uncategorized

எதிர்பார்க்கை பொது அறிவு வினாக்களின் தொகுப்பு!

சுயகற்றலுக்கான போட்டிப்பரீட்சை எதிர்பார்க்கை வினாக்களின் தொகுப்பு

1. தற்போது இலங்கையின் தொழிலின்மை வீதம்?

2. இலங்கையின் முதலாவது முதலை விவசாயப் பண்ணை எங்கு ஆரம்பிக்கப்பட்டது?

3. முதன் முதலாக இலங்கையில் இருந்து 1000 தொன் சோளம் ஏற்றுமதி செய்யப்பட்டது எந்நாடுகளுக்கு?

4. தற்போது இலங்கையின் வனப் பிரதேசம் நாட்டின் மொத்த நிலப் பரப்பளவில் என்ன சதவீதமாகும்?

5. உலகின் சனத்தொகை மிக்க நகரம்?

6. ஆதிவாசிகளின் தலைவர் ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு?

7. மிக அண்மையில் அணு சக்தி மூலம் இயக்கப்படும் நீர் மூழ்கி கப்பலை உற்பத்தி செய்துள்ள நாடு?

8. கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரத்தில் உள்ள நகரம்?

9. சிறுவர் உரிமைகள் பற்றிய பிரகடனம் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு?

10. ஐ.நா உடன் உறுப்பினராக இணைந்த 193 வது நாடு?

11. சர்வதேச எழுத்தறிவு தினம்?

12. பாலின் தூய்மையை அளக்கும் கருவி?

13. ஐக்கிய நாடுகளினால் தடை விதிக்கப்பட்ட ஒரு நாடு?

14. உலகில் ஆறு இல்லாத ஒரு நாடு?

15. 2011 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு?

16. இலங்கையில் தோற்றம் பெற்ற முதலாவது அரசியல் கட்சி, ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

17. இலங்கையின் தற்போதைய கட்டாயக் கல்வி வயதெல்லை ?

18. இலங்கையில் தற்போது காணப்படும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை?

19. சந்திரன் or நிலவு தொடர்பான ஆய்விற்கு ‘ சந்திராயன்’ எனும் செயற்கைக் கோளை விண்ணுக்கு ஏவிய நாடு?

20. இலங்கையின் முதலாவது ஒப்பங்கோடல் இடம்பெற்ற ஆண்டு ?

21. இலங்கையின் மிகப் பெரிய தானியக் களஞ்சியம் அமைந்துள்ள இடம்?

22. இலங்கையின் முதலாவது ஒலிம்பிக் வெற்றி வீரர்?

23. 2022 இல் ஆசிய விளையாட்டு இடம்பெறவுள்ள நாடு நகரம்?

24. 2018 ஆம் ஆண்டு இலங்கைத் தேயிலையை அதிகம் கொள்வனவு செய்த நாடு?

25. உலகின் மகிழ்ச்சி மிக்க நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு?

26. 2016 ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள நாடு?

27. 2016 பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேறிய நாடு?

28. இலங்கையில் மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம்?

29. இலங்கையில் விளையாட்டுத் துறைக்காக வழங்கப்படும் உயரிய விருது?

30. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கையர்?

31. உலகில் அதி கூடிய பெறுமதியைக் கொண்ட உலோகம்?

32. அமெரிக்காவின் காந்தி என அழைக்கப்படுபவர்?

33. புகைபிடிக்காதவர் வாழும் நாடு?

34. 2016 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்?

35. அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம்?

36. இலங்கையில் குறைந்த கல்வி வலயங்களைக் கொண்ட மாகாணம்?

37. குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி எந்த நாட்டு வீரர்?

38. அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலம்?

39. 19 ஆம் சீர்திருத்தத்தின் பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம்?

40.இலங்கையின் இறுதி மன்னன்?

41. இலங்கையின் இறுதி இராசதானி?

42. கட்டுநாயக்க அதி வேக பாதை எந் நாட்டின் உதவியுடன் நிர்மானிக்கப்பட்டது?

43.உலக சுற்றுலா தினம்?

44. மனித அபிவிருத்தி சுட்டியின் டிப்படையில் உயர்ந்த பெறுமானத்தைக் கொண்ட நாடு?

45. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ‘ கச்சதீவு’ ஒப்பத்தம் எத்தனையாம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது?

46. யுனஸ்கோ அமைப்பினால் ” உலக மரபுரிமைகளை அதிகம் கொண்ட நாடு ” என பிரகடனம் செய்யப்பட்ட நாடு?

47. இலங்கையில் 2016 இல் உருவாக்கப்பட்ட ” ரம்புட்டான் கிராமம்” எங்கு அமைந்துள்ளது?

48. உலகில் முதல் தோன்றிய இலக்கியம்?

49. அதிக நாடுகளை எல்லையாக கொண்ட நாடு?

50. நாணயங்கள் இல்லாத நாடு எது?

51. இலங்கையில் தேசாதிபதி எனும் பதவி எப்போது கொண்டு வரப்பட்டது?

52. இலங்கையின் முதலாவது தேசாதிபதி யார்?

53. இலங்கையின் இறுதி தேசாதிபதி யார்?அவர் எத்தனையாவது தேசாதிபதி?

54. அரசாங்க சபையின் முதல் சபாநாயகர் யார்?

55. 1931இல் மக்கள் வாக்களிக்க நிறப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டது அந்த நிறங்கள் எவை?

56. வாக்குரிமை வயது 18ஆக அறிமுகப்படுத்திய ஆண்டு? எத்தனையாம் ஆண்டு தேர்தலில் பயன்படுத்தப்பட்டது?

57. தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து பிரித்தானிய உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட இலங்கை எழுதுவினைஞர் யார்?

58. 1982இல் நடாத்தப்பட்ட மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்கு வீதம் எவ்வளவு?

59. R.பிரேமதாஸ அவர்களுக்கு எதிரான குற்றப்பிரேரணையை நிராகரித்த சபாநாயகர் யார்?

60. R.பிரேமதாஸ அவர்களுக்கு எதிரான குற்றப்பிரேரணை கொண்டு வரப்பட்ட ஆண்டு?

61. தங்கத்தின் இருப்பு அதிகம் உள்ள நாடு எது?

62. உலக கடிதம் எழுதும் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

63. பிளாஸ்டிக் இல்லாத முதல் பாலிவுட் படம் எது?

64. இலங்கையின் மிக உயரமான மலையான ‘பீதூறுதாலகால’ மலையின் உயரம் மற்றும் அமைந்துள்ள மாவட்டம் எது?

65. இலங்கையின் மிக உயரமான மலைகளில் இரண்டாம் உயரமான மலை எது? உயரம் மற்றும் அமைவிடம் எது?

66. இலங்கையின் கல்வி துறை வளர்ச்சிக்கு அண்மையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 4 திட்டங்களை குறிப்பிடுக?

67. பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போது இலங்கையை ஆண்ட அரசன் யார் ?

68. இலங்கையில் தற்போது உள்ள மொத்த உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை யாது?

69. இலங்கையில் எந்த ஆண்டு அணிசேரா மகா நாடு இடம்பெற்று இருந்தது?

70. மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடந்த இரண்டு சந்தர்ப்பங்களும் எவை?

71. இலங்கையின் அதியுயர் தேசிய விருதான “ஸ்ரீலங்கா அபிமானய” வினை தனதாக்கி கொண்ட முதல் இலங்கையர் யார்?

72. தொலைநோக்கு பார்வையில் 2025 ஆண்டு இலங்கையின் அபிவிருத்தி என்ன?

73. இலங்கை பாராளுமன்றம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?

74. தென்னிலங்கை சுற்றுலாத்துறையில் அபிவிருத்தி செய்ய உள்ள மாவட்டம் எது?

75. 2019 ஆண்டு புனித ஸ்தலம் தாக்குதல் எந்த அமைப்பு உரிமை கூறியுள்ளது?

76. இலங்கை பாராளுமன்றம் எங்கு அமைந்துள்ளது?

77. உலகில் பார்வையாளர் அந்தஸ்து கொண்ட இரு நாடுகளும் எவை?

78. இலங்கையில் ஓய்வூதியம் பெற ஆண்களின் சேவைக் காலம் எத்தனை வருடங்கள் என்ன வயது? பெண்கள் -?

79. ஜீவனாபிமானி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் யாது?

80. இலங்கை பொருளாதாரம் வளர்ச்சி போக்கை காட்டியமைக்கான காரணம் யாது?

81. இலங்கையில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திணைக்களம் எது?

82. இலங்கையின் இயற்கைத்துறை முகம் அமையப்பட்ட இடம் எது?

83. அதிக பாடசாலைகளைக் கொண்ட மாகாணம் எது?

84. 2050 ம் ஆண்டளவில் உலக பொருளாதார வல்லரசாக எதிர்வு கூறப்பட்டுள்ள நாடு?

85. இலங்கையில் ஜுரிசபையை அமைத்த ஆளுனர் யார்?

86. இலங்கை கரையோரத்தின் மொத்த நீளம்?

87. இலங்கையின் முதலாவது சிங்களக் குடியேற்றம் யாது?

88. இலங்கையின் முதலாவது நிதி அமைச்சின் செயலாளர் யார்?

89. இலங்கையில் வரிச்சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

90. இலங்கைப் பாராளுமன்றத்தினால் வெளியிடப்படும் அறிக்கை யாது?

91. இலங்கையில் முதலாவது சர்வஜன வாக்கெடுப்பு எப்போது நடைபெற்றது

92. சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து அதிக விருதைப் பெற்ற நாடு எது?

93. உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு எது?

94. இந்தோனேசியாவின் எந்தப் பகுதி சுதந்திரம் கோருகிறது?

95. கிரெட்டா துன்பெர்க் ஒரு நாட்டுப் பெண்?

96. இந்த ஆண்டு சந்திரனுக்கு ஒரு பயணத்தை அனுப்பத் தவறிய ஆனால் அதைச் செய்யத் தவறிய நாடு எது?

97. ஜகார்த்தாவின் எதிர்கால தலைநகரம் மூழ்கி வருவதால் எந்த தீவு எடுக்கப்பட உள்ளது?

98. யேமனில் போராடும் பயங்கரவாத அமைப்பு எது?

99. உலகின் “நிலைப் பேறுடைய நகரம்” என அழைக்கப்படுவது?

100. “INDRA” என்பது எந்த நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சியாகும்?

101. உலகில் மிக தாழ்ந்த பகுதி? 102.கௌதம புத்தர் முதன் முதலில் தர்மபோதனைகளினை போதித்த இடம்?

103. நோபல் பரிசு உருவாகக் காரணமாக இருந்தவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

104. சிறீமா பண்டார நாயக்கா எத்தனையாம் ஆண்டு MP ஆக இருந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்?

105. WASIPP என்பதன் விளக்கம்?

106. வெள்ளை யானைகளின் தேசம் என அழைக்கப்படும் நாடு எது?

107. முல்லேரியப் போரில் போர்த்துக்கேயரை எதிர்த்துப் போர் புரிந்த மன்னன் யார்?

108. 1972 அரசியல் யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட சட்டத்துறையின் உத்தியோகபூர்வப் பெயர் யாது?

109. அண்மையில் கொரிய நிதி உதவியுடன் எங்கே தேசிய தொழில் பயிற்சி நிலையம் திறந்துவைக்கப்பட்டது?

110. இலங்கையில் காணப்படும் மொத்த திணைக்களங்கள் எத்தனை?

111. மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடந்த இரண்டு சந்தர்ப்பங்களும் எவை?

112. மாவட்ட அமைச்சர் முறை இலங்கையில் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?

113. இலங்கையில் 97வது சர்வதேச கூட்டுறவு தின விழா இடம்பெற்ற மாவட்டம் எது?

114. இலங்கையில் பணவீக்கத்தை அளவிடும் நிறுவனம் எது?

115. பாராளுமன்ற கணக்குகளுக்கு பொறுப்பானவர் யார்?

116. இ-இலங்கை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாது?

117. வரவு செலவுத் திட்டத்தை பன்முகப்படுத்தல் முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

118. அரசாங்க தகவல் திணைக்களம்” எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது? அத்துடன் இந்த திணைக்களம் எத்தனையாம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது?

119. CMB விரிவாக்கம் என்ன?

120. SBA விரிவாக்கம் என்ன?

121. SBTD விரிவாக்கம் என்ன ?

122. ESDP விரிவாக்கம் என்ன?

123. ISBN விரிவாக்கம் என்ன?

124. PSI விரிவாக்கம் என்ன ?

125. TSEP விரிவாக்கம் என்ன?

126. SLTES விரிவாக்கம் என்ன?

127. SLEAS விரிவாக்கம் என்ன?

128. SLPS விரிவாக்கம் என்ன?

129. SLIDA விரிவாக்கம் என்ன?

130. Ccs விரிவாக்கம் என்ன?

131. SLAS விரிவாக்கம் என்ன?

132. இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் எது?

133. சங்க இலக்கியத்தில் இலங்கை எவ்வாறு அழைக்கப்பட்டது?

134. எந்த ஆண்டில் கச்சத்தீவு இலங்கையிடம் கொடுக்கப்பட்டது?

135. இலங்கையில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எவ்வளவு?

136. இலங்கையின் தேசிய விளையாட்டு எது?

137. 1959-ம் ஆண்டில் பிரதமராக இருந்த பண்டாரநாயகே யாரால் கொல்லப்பட்டார்?

138. எந்த நாட்டோடு இலங்கை அதிக வர்த்தக உறவைக் கொண்டிருக்கிறது?

139. ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமியலான கியூபா நாட்டை இலங்கை அங்கீரித்த ஆண்டு எது?

140. 2004 சுனாமியால் இலங்கையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்ன?

 

ஆதாரம்:- Robin Thanu

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Check Also
Close
Back to top button