Uncategorized

இலங்கை பற்றிய அடிப்படை பொது அறிவு தொகுப்பு!

SriLankan Tamil General Knowledge Questions

இலங்கைக்கான சிறப்பு பெயர்கள்:
    1. இந்து சமுத்திரத்தின் முத்து
    2. இந்து சமுத்திரத்தின் நித்திலம்
    3. இந்து சமுத்திரத்தின் ரிவெய்ரா
    4. தர்மவீபம்
    5. இரத்தின துவீபம்
    6. சீஹல துவீபம்
  • மிகவும் பழைய காலத்தில் அழைக்கப்பட்ட பெயர்: தம்பபன்னி, தப்ரபேன்
  • தற்போதைய உத்தியோகபூர்வ பெயர்: இலங்கை சனநாயக சோசலிச குடியரசு
  • தற்போதைய தலைநகரம்: ஶ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை
  • வரலாற்றில் முக்கியத்துவம்பெறும் வருடங்கள்: 1505, 1796, 1815, 1848, 1931,1948, 1956, 1972
  • மிகப் புராதன வரலாற்று நூல்: தீபவம்சம்
இலங்கைவரலாற்றை கற்பதற்கு உதவும் சில மூலாதாரங்கள்
  • இலக்கிய மூலாதாரமாகிய தீபவம்சம் கி.பி 4ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.எனினும் இதனை ஆக்கியோர் தொடர்பில் கண்டறியப்படவில்லை.
  • இலக்கிய மூலாதாரமாகிய மகாவம்சம் கி.பி 5ம் நூற்றாண்டில் மகாவிகாரையை சேர்ந்த மகாநாமதேரர் என்பவரினால்எழுதப்பட்டது.
  • தொல்பொருள் மூலாதாரமாகிய பொலன்னறுவை கல்விகாரை கி.பி12ம்நூற்றாண்டில் 1ம் பராக்கிரமபாகு மன்னனால் கட்டப்பட்டது.

இலங்கையின் அமைவிடம்

ஆசியா கண்டத்திற்கு தெற்காகவும், இந்து சமுத்திரத்திற்கு வடக்கிலும்,  தென்கிழக்கு ஆசியாவின் மேற்கிலும், ஆபிரிக்க கண்டத்தின் கிழக்கிலும் உள்ளது.

பூகோள ரீதியாக இலங்கை முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள்

  • இந்து சமுத்திரத்திற்கு நடுவில் இருத்தல்
  • இந்தியாவிற்கு அருகாக இருத்தல்
  • கடல் பட்டுப்பாதையில் இருத்தல்

இலங்கையின் முதலாவது வரைபடத்தை வரைந்தவர் 

  • கிரேக்க நாட்டை சேர்ந்த தொலமி

இலங்கையின் ஆதிக்குடிகள் 

  • இயக்கர்
  • நாகர் எனும் திராவிட பரம்பரையினர்
ஆரம்பத்தில் இருந்த மூன்று பிரதான இராச்சியங்கள்
  • ராஜரட்ட
  • மாயரட்ட
  • றுகுணுரட்ட

இலங்கைக்கு பிற இனத்தவர்கள் வழங்கிய பெயர்கள்

  1. ஆரியர் – தம்பபன்னி
  2. கிரேக்கர் – தப்பிரோபேன்
  3. இந்தியர் – சீலயி
  4. அராபியர் – செரண்டிப்
  5. சீனர் – சீலன்
  6. போர்த்துக்கீசர் – செயிலான். செயிலாவோ
  7. ஒல்லாந்தர் – சிலான்
  8. ஆங்கிலேயர் – சிலோன்

ஒருநாட்டின் பெருமையினையும் கௌரவத்தினையும் பிரதிபலிப்பவையாக தேசிய கொடி தேசிய சின்னம், தேசிய கீதம்

தேசிய கொடி – வாளேந்திய சிங்கம்

இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனாநாயக்காவினால் உருவாக்கப்பட்ட குழுவின் ஆலோசனைகளுக்கு அமைய உருவாக்கப்பட்ட இலங்கையின் தேசிய கொடி 1948-02-04 இல் முதன் முதலாக  தடவையாக வடிவமைக்கப்பட்ட தேசிய கொடி ஏற்றப்பட்டது.

முதலாவதாக வடிவமைக்கப்பட்ட தேசிய கொடி சிங்களவர்களை மட்டும் பிரதிநிதித்துவம் செய்வதாக இருந்ததுடன் ஏனைய இனத்தவர்களை பிரதிநிதித்துவம் செய்யாமையினால் தேசிய கொடியின் இடப்பக்கத்தில் பச்சை, செம்மஞ்சள் ஆகிய நிறங்கள் சேர்க்கப்பட்டு 1951-02-04 தொடக்கம் பயன்படுத்தப்பட்டது.

இதன் பின்னர் 1972 இல் தேசிய குடியரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி கொடியின் நான்கு மூலைகளிலும் நான்கு வெள்ளரசு இலைகள் இடப்பட்டு 1972.05.22 இல் தற்போதைய தேசிய கொடி ஏற்றப்பட்டது.

உருவாக்கியவர் – கேர்ணல் ஹென்றி ஸ்ரீல் ஒல்கொட்

இனங்களும் நிறங்களும்
  • தமிழர்  செம்மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு
  • முஸ்லீம்கள் பச்சை
  • சிங்களவர் காவி நிறம் அல்லது சிவப்பு நிற பின்னணியில் மஞ்சள் நிறத்தில்
  • வாளேந்திய சிங்கம்
  • ஏனைய சமயங்கள் கடுஞ்சிவப்பு
  • ஏனைய சிறுபான்மை இனங்கள் மஞ்சள் கரை
  • அறிவாற்றல் அல்லது கொடியைச் சுற்றியுள்ள தேசிய ஒற்றுமை மஞ்சள் நிறம்
உருவங்களும் விளக்கங்களும்
  • சிங்கத்தின் தலை நாட்டின் தலைவர்
  • சிங்கத்தின் தலையில் காணப்படும் சுருள் முடி சமயம். தியானம். அறிவு
  • சிங்கத்தின் தாடி தூய்மையான வார்த்தை
  • சிங்கத்தின் மூக்கு புத்திக்காரன்
  • சிங்கத்தின் முன் இரண்டு கால்கள் தூய்மையான முறையில் செல்வத்தை கையாளல்
  • சிங்கத்தின் உடல் வீரம்
  • சிங்கத்தின் வால் நீதி, நேர்மையான ஆட்சி
  • சிங்கத்தின் வாள் வீரம் அறநெறிக்கெதிரான போரட்டம், பௌத்த மதம் வாழ்க்கைக்கு கூறும் எட்டு வழிகள்
  • சிங்கத்தின் வாளின் பிடி நீர், செருப்பு, ஆகாயம், பூமி ஆகிய மூலக் கூறுகள்
வெள்ளரசு இலைகளும் தர்ம உபதேசமும்

நான்கு அரச இலைகள் – பௌத்த மதமும் நாட்டில் அதன் செல்வாக்கும்.

  • மெத்தா அன்பு
  • கருணா காருண்யம்
  • முதித்தா மற்றவர் மகிழ்ச்சியில் தானும் மகிழல்
  • உபேக்‌ஷா நன்மை தீமை இரண்டினையும் சமமாக கருதுதல்
  • தேசியக் கொடி ஏற்றப்படுவது – சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகளின் போது.
  • அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவது – தேசிய துக்க தினத்தில்
    தேசிய சின்னம் பயன்படுத்தப்படுவது – 1972 இல் குடியரசான பின்னர்.
  • உருவாக்கியவர் – தொல்பொருள் ஆய்வு சக்கரவர்த்தி எஸ்.எம்.செனவிரத்ன
அடையாளங்களும் வெளிப்படுத்தும் விடயங்களும் அடையாளம்
  • சிங்கம் வீரம்
  • கலசம் பூரண கும்பம் சௌபாக்கியம்
  • சூரியன், சந்திரன் உலக நிலைப்பாடு அல்லது நிலைத்திருப்பது
  • நெற்கதிர் தன்னிறைவு
  • தர்ம சக்கரம் தர்மமும் நீதியும், சமத்துவம்
  • தாமரை மலர் தூய்மை
தேசிய கீதம்
  • ஸ்ரீலங்கா தாயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ தாயே
  • இயற்றியவர் – கலாசூரி ஆனந்த சமரகோன் 1940
  • ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – C.W.W. கன்னங்கரா
  • தமிழில் மொழிபெயர்த்தவர் – புலவர்மணி நல்ல தம்பிப்பிள்ளை
  • எழுதப்பட்டது. – 1940ம் ஆண்டு
  • முதன் முதலில் பாடப்பட்டது – 1948-02-04
  • அங்கிகரிக்கப்பட்டது – 1951-11-22

    தேசிய மரம்
  • சிங்களத்தில் வழங்கும் பெயர் – நா
  • தமிழில் வழங்கும் பெயர் – நாகமரம்
  • ஆங்கிலத்தில் வழங்கும் பெயர் – Tror Wood Tree
  • தாவரவியற் பெயர் – மொசு ஆர்பொரெயா
  • முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசா அவர்களினால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவின் தீர்வின் பிரகாரம் 1985-02-26 இல் தேசிய மரமாகத் பிரகடனம் செய்யப்பட்டது.

தேசிய விளையாட்டு – கரப்பந்தாட்டம் – இது 1991ம் ஆண்டு முதல் தெரிவு செய்யப்பட்டது.

  • 1895 இல் வில்லியம் ஜி. மோகன் என்பவரால் உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட இவ் விளையாட்டு 1916 இல் றொபேர்ட் வோல்டர் கொமெக் என்பவரால் இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
தேசிய மலர்
  • சிங்களத்தில் வழங்கும் பெயர் – மானெல் நிலு புல்
  • தமிழில் வழங்கும் பெயர் – நீல அல்லி அல்லது நீலோற்பவம்
  • ஆங்கிலத்தில் வழங்கும் பெயர் – Watter Lilly
  • தாவரவியற் பெயர் – Nymphae stellata
  • மலரின் குறியீடு – தூய்மை , உண்மை , ஒழுக்கம்
  • முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசா அவர்களினால் நியமிக்கப் பட்ட ஆறு பேர் கொண்ட குழுவின் தீர்வின் பிரகாரம் 1986-02-25 இல் தேசிய மலராக பிரகடனம் செய்யப்பட்டது.
  • பல ஆண்டு கால ஆராய்ச்சிகளின் பின்பு 1986ம் ஆண்டு பெப்ருவரி மாதம் இலங்கையின் தேசிய மலராக இது தெரிவு செய்யப்பட்டது.
  • இவை நீல நிறமும், ஊதா நிறமும் கலந்து உருவாகும் இதழ்களும் பொன் நிறத்திற்கு சமமான மஞ்சள் நிற நடுப் பகுதியும் கொண்ட மலர்களாகும்.
  • நீலத் தாமரை மலர்கள் பரிசுத்தத்திற்கும். சத்தியத்திற்குமான கௌரவத்தின் உதாரணமாக விளங்குகின்றன.

 

  • தேசிய மிருகம் அல்லது விலங்கு – மர அணில்
  • தேசிய பறவை – காட்டுக் கோழி
  • தேசிய இரத்தினக்கல் நீல மாணிக்கம்
  • தேசிய நினைவுச்சின்னம் – சுதந்திர சதுக்கம்
  • தேசிய உடை 1939 ம் ஆண்டளவில் அங்கீகரிக்கப்பட்டது.
    • சிங்கள மக்களின் தேசிய உடையாக ஆண்கள் – நீளக்கை சட்டையும், வேட்டி அல்லது சாரமும்
    • பெண்கள் – ஒசரி(சாரி) சேலையும், ரவுக்கையும்.
    • சிறுமிகள் ‘லமாசாரி’ எனும் சேலையும் மடிப்புடைய ரவுக்கையும்.
பௌத்த கொடி
  • பௌத்த தர்மத்தின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் முன்னிட்டு பௌத்த பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டு அக்குழுவின் கருத்துரைப்படி பௌத்தகொடி நிர்மாணிக்கப்பட்டது.
  • இக்கொடியின் முதல் பாதி உருவமைப்பு கரோலில் பூஜித குணவர்த்தன அவர்களால் உருவாக்கப்பட்டது.
  • கொடியில் புத்தரைச் சுற்றி பிரகாசித்த ஒளிக்கதிர்களின் வர்ணங்களான நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை, செம்மஞ்சள் என்பவற்றுடன் இவ்வர்ணங்களின் கலவையும் கொண்டு விளங்குகின்றது.
  • இக் கொடி 1885-04-17 இல் முதல் பாவனைக்கு வந்ததுடன் 1885 05-28 வெசாக் பௌர்ணமி தினமன்று ‘மிகெட்டுவத்தே குணானந்த பிக்கு அவர்களால் கொட்டாஞ்சேனை ‘தீபதுத் தாராம’ விகாரையில் வைத்து முதன்முதலாக ஏற்றிவைக்கப்பட்டது.
தேசிய உணவு – பாற்சோறு
இது 2010-11-17 இல் பிரகடனம் செய்யப்பட்டது.
  • இலங்கையின் அரச கரும மொழிகள் அல்லது தேசிய மொழிகள் – தமிழ், சிங்களம்
  • குடியரசாக்கப்பட்டது – 1972.05.22
  • தேச பிதா – D.S. சேனாநாயக்கா
தங்குபவர்களின் உத்தியோக பூர்வ வதிவிடங்களின் விசேட பெயர்கள்
  • ஜனாதிபதி – ஜனாதிபதி மாளிகை
  • பிரதமர் – அலரி மாளிகை
  • சபாநாயகர் – மும்தாஜ்மகால்
  • பாராளுமன்ற உறுப்பினர் – சிராவஸ்தி

சேவை இடங்களின் விசேட பெயர்கள்

  • கல்வி அமைச்சு இசுருபாய
  • சுகாதார அமைச்சு சௌசிரிபாய
  • திட்ட அமுலாக்கல், போக்குவரத்து அமைச்சு செத்சிரிபாய
  • காணி அமைச்சு சம்பத் பாய
  • மத விவகார அமைச்சு தஹம்பாய

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Check Also
Close
Back to top button