இலகுவழி ஆங்கிலம் – பாகம் 7

HAS, HAVE, THERE IS, THERE ARE

எதிர்மறைகள் மற்றும் கேள்விச்சொற்களுடன் கேள்விகள்

 1.  அவளிடம் கணினி இருந்தது
  • She had a computer
 2. அவளிடம் கணினி இருக்கவில்லை
  • She did not have a computer
 3. அவளிடம் ஒரு கணினி இருந்ததா?
  • Did she have a computer?
 4. அவளிடம் ஏன் ஒரு கணினி இருந்தது
  • Why did she have a computer?
 1. என்னிடம் புத்தகம் இருக்குது
  • I have a book
 2. என்னிடம் புத்தகம் இல்லை
  • I don’t have a book
 3. என்னிடம் புத்தகம் இருக்கிறதா?
  • Do I have a book?
 4. என்னிடம் எப்படி புத்தகம் இருக்குது?
  • How do I have a book?
 1. அவர்களிடம் மாடு இருக்கும்
  • They will have a cow
 2. அவர்களிடம் மாடு இருக்காது
  • They will not have cow
 3. அவர்களிடம் மாடு இருக்குமா?
  • Will they have a cow?
 4. அவர்களிடம் எப்ப மாடு இருக்கும்?
  • When will they have a cow?
 1. அவனிடம் ஒரு தோட்டம் இருந்தது
  • He had garden
 2. அவனிடம் ஒரு தோட்டம் இருக்கவில்லை
  • He did not have garden
 3. அவனிடம் எங்கே ஒரு தோட்டம் இருந்தது?
  • Where did he have garden?
 1. அவளிடம் மருந்து இருக்கும்
  • she will have medicine
 2. அவளிடம் மருந்து இருக்காது
  • she will not have medicine
 3. அவளிடம் மருந்து இருக்குமா?
  • Will she have medicine?
 4. அவளிடம் எப்போது மருந்து இருக்கும்?
  • When will she have medicine? 
 1. என்னிடம் சேலை இருக்குது
  • I have a saree
 2. என்னிடம் சேலை இல்லை
  • I don’t have a saree
 3. என்னிடம் சேலை இருக்கிறதா?
  • Do I have a saree?
 4. என்னிடம் எப்படி சேலை இருக்கிறது?
  • How do I have a saree?
 1. எங்களிடம் படம் இருந்தது
  • We had picture
 2. எங்களிடம் படம் இருக்கவில்லை
  • We did not have a picture
 3. எங்களிடம் படம் இருந்ததா?
  • Did we have a picture?
 4. எங்களிடம் ஏன் படம் இருந்தது?
  • Why did we have a picture?
 1. எங்களிடம் திறப்பு இருக்குது
  • We have key
 2. எங்களிடம் திறப்பு இல்லை
  • We don’t have key
 3. எங்களிடம் எங்கே திறப்பு இருக்குது?
  • Where do we have key?
 1. அந்த குழந்தையிடம் பந்து இருக்கும்
  • That child will have a ball
 2. அந்த குழந்தையிடம் பந்து இருக்காது
  • That child will not have a ball
 3. அந்த குழந்தையிடம் பந்து இருக்குமா?
  • Will that child have a ball?
 4. அந்த குழந்தையிடம் எப்படி பந்து இருக்கும்?
  • How will that child have a ball?

பயிற்சி 1: தமிழில் எழுதுக

1. When will they have the class?
2. She did not have a house
3. We will not have a class tomorrow
4. When did he have fever?
5. They did not have a tractor
6. How do you have that key?
7. Why did they have that picture?
8. When does he have a class?
9. When will We have a seminar?

விடைகள்

1.அவர்களுக்கு எப்ப வகுப்பு இருக்கும்?
2. அவளுக்கு வீடு இருக்கவில்லை .
3. எங்களுக்கு நாளை வகுப்பு இருக்காது.
4. அவனுக்கு எப்போது காய்ச்சல் இருந்தது.
5. அவர்களிடம் உழவு இயந்திரம் இருக்கவில்லை.
6. உங்களிடம் எப்படி அந்த திறப்பு இருக்கிறது.
7. அவர்களிடம் ஏன் அந்த படம் இருந்தது.
8. அவனுக்கு எப்போது வகுப்பு இருக்கிறது.
9. எங்களுக்கு எப்போது கருத்தரங்கு இருக்கும்.

இது குறித்த மேலதிக பயிற்சிகளை செய்ய விரும்புபவர்கள் கீழே உள்ள மேலதிக  பயிற்சி என்பதை அழுத்துக!

பாகம் 7இற்கான மேலதிக பயிற்சிகள்!

இலகுவழி ஆங்கிலம் பாகம் 8