Books

புதிய விடுகதைகள்

மாணவர்களின் அறிவு வளர சிந்திக்க வைக்கும் புதிய விடுகதைகள்.

விடுகதைகள் சிந்திப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை, சிறு குழந்தைகள் கதைகள் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்கள். அவர்களிடம் கதை சொல்வதோடு மட்டும் அல்லாமல் அதன் முடிவில், கதை சம்பந்தப்பட்ட ஒரு வினா எழுப்பினால் அவர்களது சிந்தனைத்திறன் வளரும்.

அந்த வழியில் உருவானவைதான் இந்த புதிர்கள், குழந்தைகளுக்கு ஒரு பொருளை ‘நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமாக அதன் தன்மையைச் சொல்லி ‘அது என்ன?’ என்று கேட்கும் பொழுது அந்த பொருளையும் அதன் தன்மையும் அவர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிடும்.

அதற்காகவே நம் நாட்டு பாரம்பரியத்தில், நமக்கு முன்னால் வாழ்ந்த சான்றோர்களால் உருவாக்கப்பட்டன.

இன்றைய கால கட்டத்தில், விஞ்ஞான வளர்ச்சியின் வாயிலாக எத்தனையோ மீடியாக்களும், பொழுது போக்கு அம்சங்களும் பெருகி விட்ட நிலையில் புத்தகங்கள் நல்ல கருத்துக்களையும் சிந்தனைகளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றன.

இந்த விடுகதை புத்தகம் அப்படியொரு நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான்.

‘ விளையாட்டு என்றால் குழந்தைகளுக்கு பிடிக்கும், அதுவும் புதிர் விளையாட்டு என்றால் தனி குஷிதான். “எங்கே! இப்பொழுதே உங்கள் அருகில் இருக்கும் குழந்தைகளுடன் இந்த புதிர் விளையாட்டை ஆரம்பியுங்களேன்”

விடுகதைகள் PDF

Related Articles

One Comment

  1. மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button