பொது அறிவு

பொது அறிவு வினா விடைகள் தொகுப்பு 2

தமிழ் பொது அறிவு வினா விடைகள் தொகுப்பு 2 – Tamil General Knowledge Questions & Answers Set 2

அமில மழை உண்டாக காரணம், காற்று மாசுபடுதலாகும்.

தமிழிசைச் சங்க தலைவர்களில் முதன்மையானவர் – ராஜா சர் முத்தையா செட்டியார்.

நமது அசோகச் சக்கரத்தில் 6 விலங்குகள் உள்ளன.

தமிழகத்தில் கிடைக்கும் தாதுப்பொருள் – அலுமினியத் தாது.

நோபல் பரிசு பெற்ற இரண்டாவது தமிழர் – சந்திரசேகர சுப்பிரமணியம்.

இந்தியாவில் முதல் மகளிர் காவல்நிலையம் கேரளமாநிலம் கோழிக்கோடு நகரில் உருவாக்கப்பட்டது.

டாபர்மேன், ஜெர்மன் செப்பர்டு, அல்சேசியன் என ஒரு சில நாய்களைத்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் உலகில் சுமார் 200 வகை நாய்கள் உள்ளன

மங்கோலியர்கள் இந்தியாவை தெய்வத்தின் நாடு என்று அழைத்தார்கள்.

இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில் என்ற பிரெஞ்சுக்காரர்.

இந்தியாவில் முதன் முதலில் துவக்கப்பட்ட மாநிலம் உத்தரபிரதேசம்.

இந்திய மொழிகளில் முதன் முதலாக கலைக்களஞ்சியம் தமிழில் உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் அதிக நாட்கள் உயிர் வாழ்பவர்கள் பஞ்சாபியர்.

உலகின் மிகப்பெரிய தங்கச் சந்தை இந்தியாவாகும்.

தும்பா ராக்கெட் ஏவுதளம் கேரள மாநிலத்தில் உள்ளது.

கார்த்திகை மலர் என்று அழைக்கப்படுவது காந்தள் மலர்.

தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோல்.

பாராசூட் போன்ற பெரிய பலூன்களில் நிரப்பப்படுவது ஹீலியம் வாயு.

கோவா மாநிலம் பானாஜியில் கடல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.

இந்தியாவின் முதல் ரேடியோ டெலஸ்கோப் கொடைக்கானலில் 1952-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்தியாவின் முதல் நினைவு நாணயம் 1964-ல் வெளியிடப்பட்டது.

இந்தியாவின் முதல் நீர்மின்நிலையம் கர்நாடக மாநிலம் சிவசமுத்திரத்தில் 1902-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவின் முதல் நீர்மின் நிலையமும் இதுவே.

இந்தியாவில் மூன்று கடல்கள் சந்திக்கும் இடம் கன்னியாகுமரி.

இந்தியாவின் பெரிய நதிகளில் ஒன்றான யமுனை கடலில் கலப்பது இல்லை.

இந்தியாவின் செயற்கைத் துறைமுகம் கொச்சின்.

இந்தியாவின் பெரிய துறைமுகம் மும்பை துறைமுகம்.

பாலூட்டி: கன்று ஈன்று பாலூட்டுபவை பாலூட்டிகளாகும். இவை காற்றை சுவாசிப்பவை. பெரும்பாலும் நிலத்தில் வாழ்பவை: மனிதன், மிருகங்கள். சில பாலூட்டிகள் நீரிலும் வாழும். உதாரணம்: திமிங்கலம்.

பறவைகள்: பறக்க சிறகுகள் உடையவை. இவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். பெங்குவின் போன்ற சில பறவைகளால் பறக்க முடியாது.

ஊர்வன: குளிர் ரத்தப் பிராணிகள். சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு தக்கபடி அது மாறவும் கூடும். உதாரணம்: ஓணான்.

இருவாழ்விகள்: தரையிலும், தண்ணீரிலும் வாழக் கூடிய தன்மை பெற்ற உயிரினங்கள் இருவாழ்விகளாகும். அவை குளிர் ரத்தப் பிராணிகள். உதாரணம்: தவளை.

மீன்கள்: தண்ணீரில் வாழும் முதுகெலும்புள்ள உயிரினங்கள் இவை. கடல் நீரில் அதிக மீன் இனங்கள் வாழ்கின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

தமிழ் பொது அறிவு வினா விடைகள் தொகுப்பு 2 – Tamil General Knowledge Questions & Answers Set 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Check Also
Close
Back to top button